8903 ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்.

கணேசன் (ஐயர்). ஐக்கிய இராச்சியம்: இனியொரு, 3, Mount Avenue, Southall, Middlesex UB1 2LH , 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 24: எழில் பிரிண்ட்ஸ்).

224 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21×14 சமீ.

ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்பநிலையில் அதனோடு தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட கணேசன் (ஐயர்) தனது பார்வையில் ஈழப் போராட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளை, உள்வீட்டுப் பிள்ளையாக இருந்த அனுபவங்களின் தொகுப்பாக 32 இயல்களில் பதிவுசெய்திருக்கிறார். தலைமறைவு இயக்கங்கள் ஊடாகவே ஈழப்போராட்டம் ஆரம்பமாகிறது. இந்தவகையில் ஒவ்வொரு ஈழப் போராளியும் தலைமறைவுப் போராளியாகவே தனது போராட்ட வாழ்வை ஆரம்பிக்கின்றார். கணேசன் – ஐயர் என்ற பெயரில் தலைமறைவுப் போராளியாக விடுதலைப் புலிகள் அமைப்பை பிரபாகரனோடு ஆரம்பிக்கின்றார்.  சிறுவயதில் பெரியார், திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்ட ஐயர், தேசியப் போராட்ட அலை எழுந்தபோது அதனை ஆயுதப் போராட்டமாகத் தலைமை தாங்கியவர்களில் ஒருவர். பின்னாட்களில் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என்ற மாவோயிச அமைப்பின் மத்திய குழுவிலும், பின்னர் தீப்பொறி என்ற அமைப்பின் மத்திய குழுவிலும் செயற்பட்ட ஐயர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப வரலாற்றைத் தனது சாட்சியமாக இந்நூலில் பதிவுசெய்கின்றார்.

ஏனைய பதிவுகள்

8165 பக்தியின் மொழி தமிழ்: வெள்ளி நற்சிந்தனை.

மனோன்மணி சண்முகதாஸ்.  யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி). xii, 154 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 19×25 சமீ.,