8902 ஈழத் தமிழரின் முடிந்த முள்ளிவாய்க்காலும் தொடரும் போராட்டமும்.

எஸ்.ஜே. இம்மானுவேல். கனடா: போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவம், (Centre for war Victims and Human Rights )> 5310, Finch Avenue East, Unit 10, ஸ்காபரோ,  ஒன்ராரியோ, M1S 5E8, 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (கனடா: கிராபிக் லாண்ட், ரொரன்ரோ).

x, 136 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9879597-0-6.

யாழ்ப்பாண வரலாறு காணாத வெளியேற்றம், தமிழர் தலைநகர் சிங்களத்தால் சின்னாபின்னம், யுத்தம் செய்துகொண்டு அமைதிபேசும் அரசு, அரச படைகளின் இனவாதமும் பயங்கரவாதமும், சிங்கள பௌத்த தேசியமும் இனவாதமும், தற்பாதுகாப்புக்காக வளர்ந்த தமிழ்த் தேசியம், ஈழப் போராட்டத்தின் ஒப்பற்ற தலைமைத்துவம், உயிர்த்தியாகம் பற்றிய ஒரு மீளாய்வு தேவை, ஈழத் தமிழ் விடுதலையும் அனைத்துலக சமூகமும், முடிந்த முள்ளிவாய்க்காலும் தொடரும் போராட்டமும் ஆகிய 10 கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். அருட் பணியாளர்  எஸ்.ஜே. இம்மானுவேல் யாழ்ப்பாணத்தில் பிறந்து தூய பத்திரிசியார் கல்லூரியில் பயின்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்று, பின்னர் யாழ். மறை மாவட்டத்தில் இணைந்து உரோமைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல், இறையியல் துறையில் முதுமானி மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றவர். உலகத் தமிழர் பேரவையின் தலைவராக இரக்கும் இவர்,  ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுப்பதில் முன்னணி வகிப்பவர்.

ஏனைய பதிவுகள்

Data Room Software Review

The most efficient data room software reduces the stress of due diligence for you and your clients. Modern quick-launching, intuitive, and easy-to-use VDRs with easy