8915 போர் நிறுத்தம் 2001: சமகாலத்திற்கான படிப்பினை.

எஸ்.பி.நாதன். கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதான பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை).

168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

இலங்கை தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் வடபகுதிக்கு விஜயம் செய்த இலங்கை தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களின் கருத்துகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. இந்நூலில் யாழில் நடைபெற்ற பகிரங்க, தனிப்பட்ட கலந்துரையாடல்கள் (ஸ்டேன்லி சமரசிங்க-தினமின), யாழ்ப்பாண யதார்த்தத்திற்கு முகம் கொடுத்தல் (கமல் லியனாராய்ச்சி-லக்பிம), யுத்தத்தால் அழிந்த ஒரு நகரம் (மெனிக் மென்டிஸ் -ஐரோப்பிய ஒன்றியம்), செய்தியை பகுப்பாய்வு செய்தல் (ஜெஹான் பெரேரா -தேசிய சமாதான பேரவை), கடினமான உண்மை (நிஹால் கிரிஎல்ல -சுவர்ணவாஹினி), ஆபத்துமிக்க யாழ்ப்பாணத்து வாழ்க்கை (பிரான்சிஸ் புளத்சிங்கள-சண்டே ஒப்சேர்வர்), உண்மைகளையும் பிரச்சினைகளையும் கண்டறிதல் (பிரியாணி கனரத்தின-இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்), ஒரு சமாதான கலாச்சாரத்தின் தேவை (நிமலன் கார்த்திகேயன் -தேசிய சமாதான பேரவை),  மக்கள் என்ன சொன்னார்கள்? (எஸ்.பி.நாதன்- தேசிய சமாதான பேரவை) ஆகிய தலைப்புகளில் இவை அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ள ஊடகவியலவாளர்களால் எழுதப்பட்டுள்ளன. இவ்விஜயத்தின்போது பயணக்குழுவினரிடம் யாழ்ப்பாணப் பிரதேச சமூக அமைப்புகள் மகஜர்களையும் கையளித்தனர். அவ்வகையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்து அமைப்புக்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அகில இலங்கை தமிழ் ஆசிரியர் ஒன்றியம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கூட்டுறவுத்துறைச் சங்கம், குருநகர் மீனவர் அபிவிருத்திச் சங்கம், வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் மகஜர்கள் இத்தொகுப்பில் உள்ளடக்கப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46537).

ஏனைய பதிவுகள்

Casino Akkvisisjon

Content Store Velkomstbonuser For Nye Spillere Vegasplus Casino Er Det Allehånde Grenser Knyttet À Almisse? Våre Eksperter Finner Nettets Beste Nye Norske Nettcasinoer Drøssevis kampanjer

17900 துயர் துடைத்த தூதுவன்.

அன்னபரிபூரணம் ஞானேஸ்வரன். தெல்லிப்பழை: மலர்க் குழு, அமரர் சிவமகாராசா உருவச்சிலை திறப்புவிழாச் சபை, கூட்டுறவுச் சங்க வளாகம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி).  அமரர் சின்னத்தம்பி