ஷோபாசக்தி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், B-55, பப்பு மஸ்தான் தர்கா, இலாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை 600005: ஜோதி எண்டர்பிரைசஸ்).
120 பக்கம், விலை: இந்திய ரூபா 65., அளவு: 21.5×14 சமீ.
நான் சாத்தியமற்றதையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன் (எதுவரை? மே-ஜுன் 2010 சிற்றிதழுக்காக எம்.பௌசருடனான சந்திப்பு), என்னுடைய தேசிய இனம் இலங்கை அகதி (அம்ருதா நவம்பர் 2009 இதழுக்காக மீனா அவர்களுக்கு வழங்கிய நேர்காணல்), துயரங்களைப் பகடிகளாக்கும் கலகக்காரன் (புதுவிசை மே 2007 இதழுக்காக நீலகண்டன், சிராஜுதீன் ஆகியோருடனான சந்திப்பு), இன்றெமக்கு வேண்டியது சமாதானமே (தீராநதி ஒக்டோபர் 2008 இதழுக்காக அ.மார்க்சுடன் சந்திப்பு), மௌனம் என்பது சாவுக்குச் சமம் (மாத்யமம் -மலையாள இதழுக்காக 25.3.2005 டி.டி.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கிய நேர்காணல்), எழுதுவதால் கொல்லப்படலாம் (தீராநதி ஜுன் 2004 இதழுக்காக தளவாய் சுந்தரம் அவர்களுடன் சந்திப்பு), போர் இன்னும் ஓயவில்லை (ஆனந்த விகடன் 22.7.2009 இதழுக்கு ரீ.சிவகுமாருக்கு வழங்கிய நேர்காணல்), ஈழம் என்பது இந்தியாவின் கலாசார காலனி (குமுதம் 14.2.2007 இதழுக்காக கடற்கரய் அவர்களுக்கு வழங்கிய நேர்காணல்), வரலாற்றை மொழிவதற்கு தற்குறிகளுக்கும் உரிமையுள்ளது (புத்தகம் பேசுது ஜனவரி 2007 இதழுக்காக வெண்ணிலாவுக்கு வழங்கிய நேர்காணல்), புலம்பெயர் இலக்கியமல்ல, புலம்பெயர் இலக்கியம் தானுண்டு (புதிய கோடாங்கி மார்ச் 2002 இதழுக்காக அயன்புரம் ராசேந்திரன், நீலகண்டன் ஆகியோருடனான சந்திப்பு), ஈழப்பிரச்சினையை மணிரத்னம் அளவு கேவலமாக வேறு யாரும் சித்திரிக்க முடியாது (இனிய உதயம் பெப்ரவரி 2007 இதழுக்காக வி.எஸ். சிவதாணுவுக்கு வழங்கிய செவ்வி) ஆகிய நேர்காணல்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.