8921 ஈழத் தமிழரின் வரலாறும் வாழ்வியலும்.

தம்பு கனகசபை. தெகிவளை: காயத்திரி பப்ளிகேஷன், இல.68, டீ.சில்வா ரோட், களுபோவிலை, 1வது பதிப்பு, ஐப்பசி 2012. (தெகிவளை: காயத்திரி அச்சகம்).

xxxvii, 207+138  பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-97518-63-4.

ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள இந்நூலின் ஆங்கிலப்பதிவு  The Life and History of Eelam Tamils என்ற தலைப்பில்  207 பக்கங்களிலும் தமிழ்ப்பதிவு 138 பக்கங்களிலும் ஒரே நூலாக இடம்பெற்றுள்ளது. வரலாறு, இலங்கையின் ஆதிகால மக்கள், சமயங்களும் வழிபாடுகளும், ஈழத்தமிழ் அரசுகளும் தமிழகமும், ஈழ வரலாற்றுக் கால மக்களும் சமூகங்களும், வடமேல் மாகாணம், கிழக்கு மாகாணம் – மக்களும் சமூகங்களும், சட்டங்களும் வாழ்வும், தமிழ் மக்களின் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229690).

ஏனைய பதிவுகள்