8920 வன்னி யுத்தம்: களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு.

அப்பு. சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை).

336 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 125.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-8476-447-5.

ஈழத்தமிழ் மக்களுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் உள்ள கிளர்ச்சிகளின் பின்னணி என்ன? இலங்கைத் தமிழ் மண்ணில் நடந்த கொடுமைகளுக்கு ஆணிவேராக இருந்த காரணி எது? அங்கு உள்ள தமிழ் மக்களின் இன்றைய நிலை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நோக்கம், இதில் தமிழீழ உணர்வுகொண்ட போராளிகளின் பங்கு எனத் தான் கண்ட காட்சிகளையும், தான் அனுபவித்த கொடுமைகளையும், இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்று முடிந்த யுத்தத்தில் வறிய கூலிக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே பெரும்பாலும் ஈடுபட்டதால் ஒவ்வொரு போராளிக்குப் பின்னாலும் கண்ணீர்க் கதைகள் இருந்தன என்று கூறும் அப்பு, கிராமப்புற வறிய கூலிகளான பெரும்பான்மைச் சிங்கள மக்களிடையே கடந்த அறுபதாண்டு காலமாக இனவாதம் தோற்றுப்போய்விட்டிருப்பதாகக் கூறுகின்றார்.  தமிழ்ப் போராளிகள், தமது ஆயுதப் போருக்கான அடிப்படை நியாயங்களை இந்த வறிய சிங்கள மக்களிடம் நம்பிக்கை வைத்துப் பிரச்சாரம் செய்திருந்தால், தமிழ் இளைஞர்களது ஆயுதப்போராட்டத்தின் நியாயங்கள் புரியவைக்கப்பட்டு ஜனநாயகவழியில் அவர்களது  கைகளையும் இணைத்துக் கொண்டிருந்தால், விடுதலைப்போராட்டத்தின் முடிவு மாத்திரமல்லாது மொத்த இலங்கையின் அரசியல் களமும் மாறியிருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.

ஏனைய பதிவுகள்