குரும்பசிட்டி இரா. கனகரத்தினம். திருச்சி 620021: உலகத் தமிழர் ஆராய்ச்சி மையம், 12/1, பாலமுருகன் தெரு, அய்யப்ப நகர், கே.கே.நகர், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2012. (திருச்சி 620 021: ஸ்ரீ திருமலை ஆப்செட் பிரிண்டர்ஸ், 3, சந்தோஷ் காம்ப்ளக்ஸ், சுந்தர் நகர்).
112 பக்கம், வண்ணத் தகடுகள், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21×14 சமீ.
இந்நூல் உலகத் தமிழர் நிலை பற்றி விரிவான தகவல்களைத் தருகின்றது. தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் அப்பால் கரீபியன் தீவுகள் வரை விரிந்து பரந்து, மறைந்து கிடக்கும் தமிழ் உலகம் பற்றிப் பேசும் நூலாசிரியர், உலகத் தமிழர்களை ஒரு அமைப்பின்கீழ் கொண்டுவரவேண்டும்; மறந்துவரும் அவர்களின் தாய்மொழியான தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் அவர்களிடையே மீண்டும் பரவவழிசெய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்குபவர். இந்நூலிலும் அவரது ஆதங்கம் பரவலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, பர்மா, அந்தமான்-நிக்கொபார், ரினிடாட் மற்றும் டுபாக்கொ, மார்த்தினிக், குவாட்லோப், ஷிசெல்ஸ், பீஜித் தீவுகள், தென்னாபிரிக்கா, இலங்கை, மொரிஷியஸ், றியூனியன், இந்தோனேசியா, நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றியும், குறிப்பாக மலேசியா- அனந்தகிருஷ்ணன், அமெரிக்கா கோடீஸ்வரரும்-இராஜரத்தினம், பாடகி மாதங்கி அருட்பிரகாசம் ஆகியோர் பற்றியும் இந்நூலில் தனது தனிப்பட்ட கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.