8926 புத்தளம் முஸ்லீம்கள் வரலாறும் வாழ்வியலும்.

எம்.எஸ்.எம்.அனஸ். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு 2009.(கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

xxiv, 392 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21ஒ14 சமீ., ISBN: 978-955-659-196-5.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தேடலில் ஆரம்பகால முஸ்லிம் குடியேற்றங்களும் அவற்றின் வழி உருவான பட்டினங்களும் பற்றிய ஆய்வுகள் தவிர்க்கமுடியாத முக்கியத்துவமுடையவை. இலங்கையின் ஆதிக் குடியேற்றப் பிரதேசங்களில் புத்தளத்திற்கும் கற்பிட்டிக்கும் பாரிய வரலாற்றுப் பெருமை உள்ளது. இதுதான் இந்நூலின் மைய விடயப்பொருளாகும்.  கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னர் இருந்த புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்றுவந்த கடல்போக்குவரத்துக்களையும் துறைமுக நடவடிக்கைகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகின்றது. பீனிஷியர், சபாயின்கள் காலத்திலிருந்து ஐரோப்பிர் வருகை முதல் தமிழக முஸ்லிம்களின் தொடர்புகள் மற்றும் தற்காலம் வரை இப்பிரதேச முஸ்லிம் குடிமக்களின் பரவுகையும், அவர்களின் பண்பாட்டு வாழ்வும், சமூக பொருளாதார மாற்றங்களும், எதிர்கொண்ட சவால்களும் இந்த ஆய்வில் இடம்பெறும் ஏனைய விடயப்பொருள்களாகும். இலங்கை வரலாற்றில் அரேபியர் தொடர்புகள், தமிழக முஸ்லிம் தொடர்புகள், வடமேல் மாகாணமும் தொன்மைத் தொடர்புகளும், இராச்சியப் பிரிவுகளும் போர்த்துக்கேயர் காலமும், முத்து-உப்பு வர்த்தகங்களில் முஸ்லிம்களின் செல்வாக்கு,  கண்டி இராச்சியமும் கரையோர முஸ்லிம்களின் வர்த்தக மேலாண்மையும், ஆங்கிலேயர் காலமும் புதிய மாற்றங்களும், காணிப் பகிர்வும் குடியேற்றத்திட்டங்களும், புத்தளம் கோட்டையும் பள்ளிவாசல்களும், வாழ்வியல் மரபும் நவீன மாற்றங்களும், கற்பிட்டி வரலாறு, பொருளாதார வளங்களும் கடல் வாணிபமும், பெரியதம்பி மரைக்காரும் 17ம் நூற்றாண்டு பொருளாதாரப் பின்னணியும், புத்தளம் கடலேரியில் குஞ்சாலி மரைக்கார்கள், மரைக்காயர்கள், பல்லினப் பரிமாணமும் இடம்பெயர்ந்தோர் பிரவேசமும், கல்வி வளர்ச்சி, கல்பிட்டி கடல் வளங்கள்,  20ம் நூற்றாண்டு துறைமுகப் பொருளாதாரமும் வீழ்ச்சியும், முஸ்லிம்களும் கிறிஸ்தவ மிஷனரியும், குடியிருப்புகளும் தறைமுகங்களும், கிராமப்புறங்கள் ஆகிய 22 இயல்களில் இவ்வாய்வுநூல் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் உளவியல்துறையின் தலைவராகப் பணிபுரிகின்றார்.

ஏனைய பதிவுகள்