8930 இருபதாம் நூற்றாண்டு சிவதலம் ஆவரங்கால் வரலாறு.

கதிர் பாலசுந்தரம் (தொகுப்பாசிரியர்). கனடா: கதிர் பாலசுந்தரம், 19, Summerlea Street, Markham, Ontario, L3S 4H6, 1வது பதிப்பு, மே 2010. (தமிழ்நாடு: சில்வியா லேசர்ஸ், திருச்சி).

xxx, 523 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 0-9781836-03.

லண்டன் ஆவரங்கால்  ஒன்றியத்தின் பதிப்புரிமையுடன், கே.சின்னத்துரை ஜே.பி. அவர்கள் வெளியிட்டுள்ள பிரதேச வரலாற்று நூல் இது. நான்கு பிரிவுகளைக்கொண்ட இந்நூலின் முதலிரண்டு பிரிவுகளும் தமிழ்மொழியில் பதிவாகின்றன. மூன்றாம் நான்காம் பிரிவுகள் ஆங்கில மொழியில் பதிவாகின்றன. புவியியல் அமைவு, சமய, பொருளியல், அரசியல், கலை, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்கள் முதற்பிரிவில் சொல்லப்படுகின்றன. மூதாதையரின் பௌதிகச் சூழலையும், வாழ்வியலையும் படைப்பிலக்கியங்களின் வாயிலாக இரண்டாம் பிரிவு பேசுகின்றது.  முன்னுரை, முகவுரை, அறிமுகம் என்பவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பும் 35-49ம் அத்தியாயங்களும் ஆங்கில மொழியில்  மூன்றாம் நான்காம் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. வே.இளையகுட்டி, சி.கிருஷ்ணபிள்ளை, ந.மயில்வாகனம், கா.சிவசோதி, வெ.கணபதிப்பிள்ளை, க.திரவியம், அ.க.த.கிருஷ்ணராசா, க.சின்னத்துரை, சி.சிவசுப்பிரமணியம்,  சின்னத்துரை ஸ்ரீவாஸ் ஆகியோர்  இத்தொகுப்பிற்கான ஆக்கங்களை எழுதியுள்ளனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  229010).

ஏனைய பதிவுகள்

Darmowe Gry Casino Z brakiem Logowania

Content Bezpłatne gry hazardowe automaty 2024 – Najlepsze kasyno Betway Jak Odrabiają Kasyno Online Z brakiem Logowania? Wydawcy automatów do odwiedzenia rozrywki internetowego 777 Przypominamy,

13762 யோவான் 14:2 (சிறுகதைகள்).

திசேரா. (இயற்பெயர்: எஸ்.தியாகசேகரன்). கொழும்பு: சிறகுநுனி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 156 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×13 சமீ., ISBN: 978-955-97102-4-0.

13785 கர்ப்ப நிலம்: வனமேகு காதை.

குணா கவியழகன். சென்னை 600 014: அகல் பதிப்பகம், 348-v, டிடிகே சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (சென்னை: மணி ஆப்செட்). (8), 336 பக்கம், விலை: இந்திய ரூபா 300.,