மலர்க்குழு. பிரான்ஸ்: புங்குடுதீவு மக்கள் ஒன்றியம், 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.
2001இல் தொடக்கப்பட்டு, பத்தாவது ஆண்டில் காலடி பதிக்கும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ஒழுங்குசெய்த கலை மாலை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஒன்றிய உறுப்பினர்களின் வாழ்த்துச் செய்திகளுடன் சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்ந்த எம்மவர் பண்பாட்டு வாழ்வியலில் வழக்கொழிந்துவரும் சொற்பதங்கள் (வி.ரி.இளங்கோவன்), மழைநீரைச் சேமித்தல் (சுப்பையா சஸ்பாநிதி), இலங்கைத் தீவின் ஆதிகால வரலாறு (கந்தையா தேவமனோகரன்) ஆகிய கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. தமிழ்த்தினப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.