8942 நெடுந்தீவு சிதையும் சின்னங்கள்: வரலாறும் வளங்களும்.

நா.இலட்சுமணராசா (புனைபெயர்: நெடுந்தீவு லக்ஸ்மன்). யாழ்ப்பாணம்: நா.இலட்சுமணராசா, 63/18 V, பரவைக்குளம் ஒழுங்கை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 781, சிவலிங்கப் புளியடி, காங்கேசன்துறை வீதி).

xvi, 181 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.

இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவு ஒல்லாந்தரால் னுநடகவ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தலைத்தீவு, பசுத்தீவு, பால்தீவு, அபிஷேகத் தீவு, தயிர்த் தீவு முதலான பெயர்களால் பண்டையகாலத்தில் அழைக்கப்பட்டு வந்திருந்தது. வெடியரசன் என்பவன் நெடுந்தீவின் மேற்குப்புறத்தில் கோட்டைக்காடு என்ற இடத்தில் ஒரு கோட்டையை அமைத்து ஆட்சிசெய்திருந்தான். அக்கோட்டை சிதைவுற்றபோதிலும் இன்றும் அதன் சிதிலங்களைக் காணமுடிகின்றது. பெரியதுறை, மாவிலித்துறை உள்ளிட்ட பல துறைமுகங்கள் அங்கு  பண்டைய கடற்பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தன. நெடுந்தீவுக் கட்டைக் குதிரைகள், பெருக்குமரம் ஆகிய முக்கிய சிறப்புகள் இத்தீவுக்குண்டு.  இலங்கை இராணுவம் நெடுந்தீவை ஆக்கிரமித்தபின்னர் அங்குள்ள மக்கள் படிப்படியாக புலம்பெயர்ந்து சென்றுள்ள நிலையில் இன்று சனத்தொகை மிகவும் அருகி  நெடுந்தீவின் வரலாற்றுச் சின்னங்களும் கவனிப்பாரற்று அழிவுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய பின்புலத்தில் நின்று இந்நூல் எழுதப்பெற்றுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  216481).

ஏனைய பதிவுகள்

Best Casino Incentives On line

Posts No-deposit Extra Local casino Betting Requirements Method to Interact Via Pay Because of the Mobile Casinoin To claim a no deposit Cellular Incentive, you’ll