அ.ஆறுமுகம். யாழ்ப்பாணம்: ஆ.விவேகானந்தன், ஆ.சிவானந்தன், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (யாழ்ப்பாணம்: போஸ்கோ அச்சகம், நல்லூர்).
xx, 100 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-955-
மதுரைப் பண்டிதரான அப்பாபிள்ளை ஆறுமுகம் அருட்புலவர், சிவநெறிச்செல்வர், புலவர்மணிஆகிய விருதுகளைப் பெற்றவர். 24 நூல்களின் ஆசிரியர். பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம் தொடங்கிய 4.9.1925இல் அப்பாடசாலையில் சேர்ந்து கல்வி பயின்றவர். இந்நூலில் பண்ணாகம் ஊர்ப்பெயர் வரலாறு, எல்லைகள், சமயம், பழமை, உணவு அன்றும் இன்றும், நாணயம், அக்காலத் திருமண முறை, பண்ணாகப் பாரம்பரியம், மடங்கள், இங்கு விளங்கிய கலைகள் (போர்த்தேங்காய் அடித்தல், சிவராத்திரி நாடகம், அன்ன ஊஞ்சல் ஆட்டம், காவடியாட்டம், கோலாட்டம், கும்மி), கல்வி வசதிகள், (விக்டோரியா, மெய்கண்டான் கல்லூரிகள்), அதிபர்கள், விசவத்தனை முருகன் கோவில், பண்ணாகத்தில் வாழ்ந்த வைத்திய மேதைகள், கிராமத்தின் நூலாசிரியர்கள் (முத்துக்குமாருப் புலவர், பண்டிதர் அ.ஆறுமுகம், ஆறுமுகம் சேயோன், பொன் பாக்கியம்), பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் (நாச்சியார் செல்வநாயகம், இஆறுமுகம், சோ.க.வேலாயுதர்), நாகராணி சீதரன்), புராண படன உரையாசிரியர்கள், சமூக நலன்புரி அமைப்புகள், சங்கங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆசிரியர் இந்நூலில் பதிவுசெய்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 131503).