அரு.யேசுதாசன் (இயற்பெயர்: பெரியதம்பி அருளானந்தம் யேசுதாசன்). பிரான்ஸ்: பாசெய் மாநகர் புனித அந்தோனியார் முத்தமிழ்க் கலாமன்றம், பாரிஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (கல்லச்சுப் பிரதி).
(15), 36 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
கி.மு.3000 ஆண்டில் மணற்றி என அழைக்கப்பட்டு பின்னர் பாசூர், பாசெய்யூர் (பாஸ்-செய்யூர்), பாசெய்நகர், பாசெய்மாநகர், பாசையூர் எனப் பெயர்வழங்கப்பெற்ற யாழ்ப்பாண மாவட்டக் கரையோரப் பிரதேசம் பற்றிய வரலாறும், அம்மண்ணின் மக்களின் பண்பாடு, கலை இலக்கிய வாழ்வு பற்றிய பதிவாகவும், புலம்பெயர் நாடுகளில் பாசையூர் மண்ணின் மக்களின் பணிபற்றிக் குறிப்பிடுவதாகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 1960களில் பாசையூர் பிரதேச சமய வழிபாடுகளை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் 15 பக்கங்களில் நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. 1890இல் பாசூர் (Pass Oor) அல்பிரட் மேதர் கிராமசபை அலுவலராக இருந்ததாகவும், 1917இல் பாசையூர் மாவட்ட நகரசபையாகத் தரமுயர்த்தப்பட்டதாகவும், 1923இல் நகரசபை எட்டரை மைல் விஸ்தீரணமுள்ளதாக- கிழக்கு, மத்திய, மேற்கு என மூன்று சபைகளைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.