சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அத்தீக்). தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).
190 பக்கம், விலை: இந்திய ரூபா 145., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80240-60-2.
கவிஞனாக மாத்திரம் இதுவரை அறியப்பட்ட சோலைக்கிளியின் இன்னொரு பரிமாணம் அவரது பத்தி எழுத்துக்களடங்கிய நூலாகின்றது. கிழக்கிலங்கையில் அவர் வாழும் கல்முனைப் பிரதேசக் கிராமப் பகுதியொன்றின் மண்வாசனையை, மனித நடத்தைகளை, நிலம் சார்ந்த நினைவுகளை இந்நூலில் பதிவாக்கியிருக்கிறார். இந்தப் பதிவுகளில் அவருடைய இளமைக்கால நினைவுகள் மீள்நினைவூட்டப்படுகின்றன. மலரும் அவரது நினைவுகள், ஈழக்கிராமமொன்றில் கடந்துபோன அல்லது தொலைக்கப்பட்ட எமது வாழ்வுடன் ஒப்பிட்டுப்பார்த்து எம்மையும் மகிழவோ ஏங்கவோ வைக்கின்றன.