மாதினி நிமலன் (இதழாசிரியர்). கனடா: கேளிர் ஒன்றியம், 50, Beulah Drive, markham, Ontario, L3S 3N2, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கனடா: அச்சக விபரம் தரப்படவில்லை)
76 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
ஈழத்தின் வடபுலத்தில் அமைந்துள்ள அல்வாய், வதிரி, கொற்றாவத்தை ஆகிய மூன்று கிராமங்களையும் அவற்றை அண்டியுள்ள ஏனைய கிராமங்களையும்சேர்ந்த ஈழத்துத் தமிழர் கனடாவில் இணைந்து நிறுவிய அமைப்பே கேளிர் ஒன்றியமாகும். கணியன் பூங்குன்றனாரின் யாவரும் கேளிர் என்ற கவிவரியைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் இவ்வமைப்பின் 2010ம் ஆண்டுக்குரிய குளிர்கால ஒன்றுகூடலின்போது வெளியிடப்பட்ட மலர் இது. குறிப்பிட்ட பிரதேச மக்களின் பல்வேறு படைப்புகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. ஈழத்துத் தமிழ் இலக்கியம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துசெல்லவேண்டும் (தெணியான்), அபிவிருத்தியடைந்த நாடுகளில் கல்வியும் வேலைவாய்ப்பும் (மா.கருணாநிதி), ஊமைக்காயம்- சிறுகதை (அ.விஷ்ணுவர்த்தினி), குறுந்திரைப்படங்களும் சிறுகதைப் புனைவுகளும் (சி.விமலன்), தந்தையரும் தனயரும் (த.கலாமணி), தகாமுறைத் துணைகவரல் (பேரி.மயூரன்), தமிழ்க் காவியப்பரப்பில் கம்பராமாயணம் (தேவகி ராமேஸ்வரன்), வேட்டையாடு விளையாடு (T.சதீஷ்), கொக்கு வெடி-சிறுகதை (சூரன் V.ரவிவர்மா), பேராசிரியர் கா.சிவத்தம்பி- தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க இயலாத ஆளுமை (அநாதரட்சகன்), பக்தி இலக்கியங்களில் பாதத்தின் பெருமை (கொற்றை பி.கிருஷ்ணானந்தன்), வெட்டியான்- சிறுகதை (க.பரணீதரன்), சிவகாமியின் செல்வன் (செகா. சிவபாலசிங்கம்), மகிழ்ச்சிகரமான வாழ்வை நோக்கி (த.துஷ்யந்தன்), கர்நாடக இசை தமிழிசையே (B.சௌந்தர்), இதுவும் போதையே (திரவியம் சர்வேசன்) ஆகிய முக்கிய கட்டுரைகளுடன் சிறுவர்களின் ஆக்கங்களும் புகைப்பட ஆவணங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இவ்வமைப்பின் நடப்பாண்டுக்கான தலைவராக சர்வேசன் திரவியமும், செயலாளராக அனுஷா செல்வரட்ணமும் இயங்குகின்றனர்.