செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: அறிவுக்களஞ்சிய நூல்வரிசை, வரதர் வெளியீடு, 84/3, மானிப்பாய் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).
32 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 18×12 சமீ.
ஒரு பாடசாலை மாணவன் யாழ்ப்பாண வரலாற்றை அறிந்துகொள்ள பல்வேறு நூல்களையும் வாசித்தே அறிந்துகொள்ளவேண்டிய இன்றைய நிலையில், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வரலாறு ஆதிகாலம் முதல் தற்காலம் வரை முழுமையாகவும் சுருக்கமாகவும் ஈழத்தவர் வரலாறு (க.குணராசா-1996), யாழ்ப்பாணச் சரித்திரம் (செ.இராசநாயகம்-1933), Notes on Jaffna( John M.Martyn-1923), A Handbook to the Jaffna Peninsula (American Ceylon Mission Press-1905), The Kingdom of Jaffnapatnam (P.E.Pieris-1920) ஆகிய பல்வேறு நூல்களிலும் இருந்து தேர்ந்து எடுத்துத் தொகுத்து, சுவாரஸ்யமான தனிநூலாக இதில் வழங்கியுள்ளார். வரதர் வெளியீடாக வந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசையில் முதலாவது நூல். இதனைத் தொடர்ந்து கிரண்பேடி (எஸ்.பி.கிருஷ்ணன்), மனிதர்களின் தேவைகள் (சாமிஜீ) என்ற நூல்களை அறிவுக்களஞ்சிய நூல் வரிசையில் காணமுடிகின்றது.