8952 பூநகரி தொல்பொருளாய்வு.

பரமு புஷ்பரட்ணம். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி).

(2), 214 பக்கம், படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×20 சமீ., ISBN: 955-9194-04-6.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான பரமு புஷ்பரட்ணம்  எழுதிய இந்நூல் அறிமுகம், ஆதிக் குடியிருப்புகள், வெளிநாட்டு உறவுகள், சோழர் ஆட்சிக் காலமும் பூநகரியும், பூநகரியும் சோழர்காலப் பண்பாடும், பூநகரியிலுள்ள புராதன கட்டிட அழிபாடுகளும் அவற்றின் வரலாற்று முக்கியத்துவமும், சோழர் ஆட்சிக்குப் பிற்பட்ட காலத் தொல்லியல் சின்னங்கள் ஆகிய ஏழு இயல்களைக் கொண்டுள்ளது. பூநகரி, இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் வரலாற்று முக்கியத்துவமான பிரதேசமாகும். பூநகரியின் இறங்குதுறையானது  யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் மாற்றுப்பாதையாகவும் பயன்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்