புகழேந்தி தங்கராஜ். சென்னை 600 020: திரிசக்தி பப்ளிக்கேஷன்ஸ், Giriguja Enclave, 56/21 First Avenue சாஸ்திரி நகர், அடையாறு, 1வது பதிப்பு, ஜனவரி 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
200 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21.5×14 சமீ.
2009 மே மாதத்தின் பின்னர் தமிழகத்தில் எழுந்த ஈழத்தமிழர் ஆதரவு அலைகளின் பின்னணியில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. கொடி வணக்கம் செய், ஐ.நா.வின் கள்ள மௌனம், வரலாறு நம்மை மன்னிக்காது, புளுகுப் பூனைகளும் ருத்ராட்சப் பூனைகளும், நமக்கும் ஒருநாள் இந்தக் கதிதான், மரத்துப் போய்விட்டதா கோலிவுட், இந்திய தேசமே நீ தந்தையா ஜந்துவா? அடங்க மறுப்பாரா திருமா? வாழும் தகுதி இருக்கிறதா தமிழனுக்கு? சகோதர யுத்தம்-விளக்கம் சொல்வாரா கலைஞர்? கலைஞருக்கு ஒரே ஒரு கேள்வி, புஸ்வாணம் தான் பொருத்தமாக இருக்கும், தவறு செய்தது பிரபாகரனா கலைஞரா? பிரபாகரனுக்காக கலைஞர் கண்ணீர் சிந்தலாமா? ஜெகத் கஸ்பரின் நோக்கம் என்ன? பதவி விலகுங்கள் அதற்கு முன்னால், அலங்கார ஊர்திகள் சொல்லும் செய்தி, முள்வேலி முகாமுக்கு அழைப்பு உண்டா? கீதையைக ;கடைப்பிடித்த ஜின்னா, ஆண்மையுடன் ஒலித்த காந்தியின் குரல், ஹிந்து B -முஸ்லிம் B- காந்தி சிரிப்பு, காந்தி-பிரபாகரன் ஒப்பிட்டால் என்ன தவறு? பாவம் காமராஜர் விட்டுவிடுங்கள், யாரைத்தான் நம்புவது? 49 ஓ- எப்படி இருந்தால் ஓ போடலாம்?ஆண்டியின் சொல் அம்பலம் ஏறுமா? ஆவின்- தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி? ஓரினச் சேர்க்கையும் மகரந்தச் சேர்க்கையும், இன்றே தொடங்குவோம் கொசுவதையை, சென்னையை நெருங்கும் ஆபத்து? போற்றுதலுக்குரிய சென்னை மாநகராட்சி ஆகிய 31 தலைப்புகளில் இவரது கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன.