ஏ.எஸ்.மணி (தொகுப்பாசிரியர்). சென்னை 600014: பாவை பப்ளிக்கேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சென்னை600014: பாவை பிரின்டர்ஸ்).
(6), 133 பக்கம், விலை: ரூபா 45., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 81-7735-173-7.
தஞ்சையில் 1995 ஜனவரி 1-5 வரை எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அதையொட்டி தாமரை சஞ்சிகை ஒரு சிறப்புமலரை வெளியிட்டது. அதிலிருந்து தேர்ந்த 15 இலக்கியக் கட்டுரைகளை உள்ளடக்கித் தமிழகத்தில் வெளியிடப்பட்ட இந்நூலில் ஈழத்தவர்களின் சில கட்டுரைகளும் அடங்கியுள்ளன. ப.ஜீவானந்தம், பாலதண்டாயுதம், மயிலை சீனி வெங்கடசாமி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு,வேங்கடாசலபதி, எஸ்.வையாபுரிப்பிள்ளை, சாமி சிதம்பரனார், டாக்டர் ரொமிலா தப்பார், பேராசிரியர் இராமசுந்தரம், திலகவதி, பேராசிரியர் தி.சு.நடராஜன், மா.இராசமாணிக்கனார், பேராசிரியர் நா.வானமாமலை ஆகியோரின் கட்டுரைகளுடன் ஈழத்துப் பேராசிரியர் க.கைலாசபதி எழுதிய முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும் என்ற கட்டுரையும், பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய தமிழிலக்கியத்தின் நவீன காலம் இன்னும் தொடர்கிறதா? என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 171781).