தெ.வெற்றிச்செல்வன். சென்னை 600078: சோழன் படைப்பகம், 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை: அம்மன் பிரிண்டிங் வேர்க்ஸ்).
312 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ.
புகலிடமும் தமிழ்க் கவிதையும் வளர்ச்சிப்போக்கும் பற்றிய அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூலில் வெற்றிச்செல்வன் புகலிடக் கவிதைகளின் உள்ளீட்டியல், வெளியீட்டியல், உளவியல், அழகியல், ஒப்பீட்டியல் ஆகியவற்றைப்பற்றித் தனித்தனி அத்தியாயங்களில் ஆய்வுசெய்திருக்கிறார். அத்துடன் புகலிடத் தமிழ்ப் புதினங்கள், புகலிடத் தமிழ்ச் சிறுகதைகள் பற்றியும் இவரது ஆய்வு இந்நூலில் நீண்டுள்ளது. புலம்பெயர்க்கப்பட்டு பன்னாடுகளிலும் அலைந்துலை வாழ்வு வாழும் ஈழத்தமிழர்களின் ஆக்கஇலக்கியப் படைப்புக்களை வாசித்து அவற்றின் சாரத்தை ஆழமாக, விரிவாக, அழகியலோடு இதர மொழிகளிலுள்ள போராட்ட இலக்கியங்களோடு ஒப்புநோக்கி இவ்வாய்வு ஒரு தமிழகத்தவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பாகும்.