8966 ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும்.

மகாராசன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600005: கருப்புப் பிரதிகள், B-74, பப்பு மஸ்தான் தர்கா, இலாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (சென்னை 600005: ஜோதி கிராபிக்ஸ்).

168 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 21.5×14 சமீ.

இலங்கையில் சாதி அமைப்பின் இறுக்கம் (வெகுசனன் -இராவணா), தமிழர் மத்தியில் சாதியமைப்பின் தாக்கம் (வெகுசனன் -இராவணா), சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் (வெகுசனன் -இராவணா), வட்டுக்கோட்டை சாதிப் போராட்டங்களும்அதன் சமூக வரலாற்றுப் பின்புலமும் (ச.தில்லை நடேசன்), ஈழத்துத் தமிழ்ச் சமூகமும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பும் (செ.சண்முகவேல்), ஈழம்: தென்னாசியச் சாதியமைப்பிலிருந்து தலைகீழ் மாறான மலையகச் சாதியமைப்பு (வ.ஐ.ச.ஜெயபாலன்), ஈழத்தில் சாதிய நிலைமை குறித்து டொமினிக் ஜீவாவுடனான நேர்காணல் (அசோக் பிரியதர்ஷனி), ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும் குறித்த வாக்குமூலங்கள் (இனியன்), பார்ப்பனியச் சுவடுகளைச் சுமக்கும் புலம்பெயர்ந்த அறிவுஜீவிகள் (தமிழ்த்தேசன்) ஆகிய ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45652).

ஏனைய பதிவுகள்