யமுனா ராஜேந்திரன். திருச்சி மாவட்டம்: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, 1வது பதிப்பு, 2012. (இந்தியா: அடையாளம் பிரஸ்).
xxviii, 692 பக்கம், விலை: இந்திய ரூபா 550., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-7720-177-2.
தமிழ் அரசியல், கலாச்சாரம், இலக்கியம், தத்துவம், இதுவரையிலான தமிழ் இடதுசாரி மரபு அனைத்தையும் ஈழவிடுதலைப் போராட்டமானது தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டதாகக் குறிப்பிடும் யமுனா ராஜேந்திரன், ஈழப்போராட்டம் நந்திக் கடலில் வஞ்சகமாக அழிக்கப்பட்டிருந்தாலும், அதன் வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, மானுட சுயதரிசனங்களையும் அரசியல் சயவிமர்சனங்களையும் அது எழுப்பியபடியே இருக்கின்றது என்கிறார். உலக தேசிய விடுதலைப் போராட்ட மரபின் பின்னணியில் ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வுசெய்யும் இக்கட்டுரைகள், இன்றைய சர்வதேச அரசியல் சூழலில், எதிர்ப்பு அரசியலின் எதிர்கால வடிவம் எத்தகையதாக இருக்கும் என்னும் தேடலையும் மேற்கொள்கின்றன.சர்வதேசச் சூழல், விடுதலைப் போராட்ட அனுபவங்கள், சாதியமும் தமிழ்-முஸ்லீம் ஒற்றுமையும், இலங்கை- இந்திய மார்க்சிஸ்டுகள், மாற்றுக் கருத்து அரசியல், இலக்கியவாதிகள், இலங்கை அறிவுஜீவிகள், மனித உரிமை விவாதம், தமிழகத் தமிழ்த் தேசியம், ஆவணப்படங்கள், மூன்று அறிக்கைகள், பின் முள்ளிவாய்க்கால் யதார்த்தம் ஆகிய பிரிவுகளுக்குள் அடக்கியுள்ள தனது 54 கட்டுரைகளை இந்நூலில் நூலாசிரியர் தொகுத்தளித்துள்ளார்.