பிரான்ஸிஸ் ஹரிசன் (ஆங்கில மூலம்), என்.கே.மகாலிங்கம் (தமிழாக்கம்). நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர்; 2012. (சென்னை 600014: ராஜம் டிஜிட்டல் ஓப்செட் பிரின்ட்ஸ்).
331 பக்கம், விலை: இந்திய ரூபா 250.00, அளவு: 23×15 சமீ., ISBN: 978-93-81969-57-1.
பிரான்ஸிஸ் ஹரிசன் கேம்பிரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியிலும், லண்டன் சொயாஸ் (SOAS) பல்கலைக்கழகக் கல்லூரியிலும், லண்டன் இம்பீரியல் கல்லூரியிலும் பயின்றவர். பீ.பீ.சீ நிறுவனத்தின் அயலகச் செய்தியாளராகப் பணியாற்றிய இவர் 2000-2004இல் பீ.பீ.சீயின் இலங்கைச் செய்தியாளராகப் பணியாற்றியவர். சர்வதேச மன்னிப்புச் சபையிலும் பணியாற்றியவர். இலங்கையின் இனப்படுகொலைகள் பற்றிய இவரது Still Counting the Dead என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். 2009இல் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த வேளையில் என்ன நடந்தது என்பதை உலகுக்குச் சொல்வதாக அமைந்துள்ள இந்நூல் நேரடி அனுபவங்கள், நேர்காணல்களின் வெளிப்பாடாயமைந்த சத்திய தரிசனமாகின்றது. இலங்கை அரசின் கொடுமைகளுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஈழத்தமிழர்களுக்கு இழைத்த பாரிய அநீதி இந்நூலில் வெளிச்சமிட்டுக்காட்டப்படுகின்றது. மொழிபெயர்ப்பாளர் மகாலிங்கம் புங்குடுதீவைச்சேர்ந்தவர். Things Fall Apart, No longer at Ease, Life of Animals உள்ளிட்ட பல பன்னாட்டுப் படைப்புக்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர்.