8976 கனவாகிப் போன கச்சத்தீவு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன். சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, ஒக்டோபர்; 2008. (சென்னை 600005: மணி ஓப்செட்ஸ்).

64 பக்கம், விலை:  இந்திய ரூபா 40., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-81-89912-61-1.

இந்திய தீபகற்பத்தின் தெற்குக் கடற்கரையில், பாம்பன் தீவுக்கு அருகில் உள்ள 285.2 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது கச்சதீவு. இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. கச்சதீவு தமிழர்களின் உரிமை என்பதற்கும், சேதுபதி அரசர்களின் ஆளுகைக்குட்பட்டது என்பதற்கும் விக்டோரியா மகாராணியின் பிரகடனத்தை சாட்சியமாக்குகின்றார். கீழக்கரை வாசுதேவன் செட்டியார் கச்சதீவு உரிமையை நிலைநாட்ட, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புப் பெற்றதையும் குறிப்பிடுகின்றார். 1939ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் சீனிக்குப்பன் என்பவர், கச்சதீவில் அந்தோனியார் கோவில் எழுப்பியதையும் ஆதாரத்தோடு விளக்குகின்றார். இந்தியாவின் பாதுகாப்புக்கு அரணாகவும், தமிழக மீனவர்களுக்கு ஒரு வேடந்தாங்கலாகவும் திகழ்ந்த கச்சதீவை 1974இல் மத்திய காங்கிரஸ் அரசு இலங்கைக்குக் காவு கொடுத்தபோது அதைத் தடுக்கவேண்டிய கடமையை, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி செய்யவில்லை என்பதை ஆணித்தரமாக ஆதாரங்களோடு விளக்குகின்றார். இழந்த உரிமையை மீளப்பெற தமிழரைத் தட்டி எழுப்புகின்றார். வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு, கோவில்பட்டி அருகிலுள்ள குறிஞ்சாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஏனைய பதிவுகள்

Superstar threshold set

Blogs Sensory establishes ( Optical Fibre Orangery celebrity ceiling Mining of Unknown PlanetsExplore procedurally produced globes filled up with resources, mysteries, and you will unusual