அகரம் அமுதன். அவுஸ்திரேலியா: ஈழநேசன் வலைத்தளம், 1வது பதிப்பு, நவம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
112 பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 125.00, அளவு: 22×14.5 சமீ.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை விதந்து போற்றி அகரம் அமுதன் அவர்கள் எழுதிய ஈற்றெடுப்பு வகையில் (அந்தாதி வகையில் அமைந்த) அமைந்த 151 வெண்பாக்களைப் பாகம்பாகமாக அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் ஈழநேசன் வலைத்தளம் வெளியிட்டு வந்தது. அத்தொடர், இப்போது வண்ணக்கலவை கொண்ட நூலாக வெளிவருகின்றது. பக்கங்கள் தோறும் வண்ணச் சித்திரங்கள் அவுஸ்திரேலிய ஓவியர் சங்கரின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன. இந்நூலுக்கான அணிந்துரையை நாம் தமிழர் இயக்கத் தலைவர், இயக்குநர் சீமானும், சின்னத் தாராபுரம் பாவலர் இறையரசனும் வழங்கியுள்ளனர்.