ஆர்கலி (தொகுப்பாசிரியர்), மு.களஞ்சியம் (பதிப்பாசிரியர்). சென்னை 6000087: தமிழர் நலம் பதிப்பகம், இல.5, முதல் தெரு, இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை: இன்டோ ஆர்ட் பிரிண்ட்ஸ்).
164 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.
1989இலிருந்து 2008 வரையான காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27இல் மாவீரர் நாள் நிகழ்வின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இதுவாகும். இவ்வுரைகள் சிங்கள ஆட்சியாளர்களால் மாத்திரமல்லாது இந்திய ஆட்சியாளராலும் சர்வதேச சமூகத்தினாலும் உன்னிப்பாக அவ்வக்காலங்களில் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. பதிப்பாசிரியர் மு.களஞ்சியம், தமிழர் நலம் பேரியக்கம் என்ற அமைப்பின் தலைவராவார்.