ஜெ.அரங்கராஜ் (தொகுப்பாசிரியர்). சென்னை 600078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை: அம்மன் பிரிண்டிங் வேர்க்ஸ்).
344 பக்கம், அட்டவணை, விலை: இந்திய ரூபா 225., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80369-02-0.
மட்டக்களப்பு மாநிலத்தின் காரைதீவில் பிறந்த மயில்வாகனன் தேசிய இயக்கமான இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து துறவறமேற்று விபுலாநந்தர் என்னும் துறவுப்பெயர் பூண்டு வாழ்ந்தவர். கொழும்புப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முதலாயவற்றின் முதல் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர். தமிழ்த் தேசியச் சிந்தனைமிக்க அவரது எழுத்துக்களின் வழியாக அவரது வாழ்வும் பணிகளும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. நூலாசிரியர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.