8986 பாயும் புலி பண்டாரக வன்னியன்.

மு.கருணாநிதி. சென்னை 600032: ராக்போர்ட் பப்ளிக்கேஷன்ஸ், எஸ்.6, திரு. வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1991. (சென்னை 600032: ராக்போர்ட் பிரஸ்).

(8), 469 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: இந்திய ரூபா 125., அளவு: 22×14 சமீ.

தமிழ்ஈழ மண்ணின் பகுதிக்குட்பட்ட வன்னிநாடான அடங்காப்பற்றின் காவலன் குலசேகரம் வைரமுத்து பண்டாரக வன்னியன் முல்லைத்தீவில் இருந்து வற்றறாப்பளை கண்ணகை அம்மன் கோவில் வரையிலான 2000 சதுர மைல் பரப்பினை ஆட்சி செய்த குறுநில மன்னன். தமிழகத்தில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராகப் போராடிய கட்டபொம்மன் என்ற பாண்டியமன்னன் போன்று வன்னி மண்ணைக் காக்க வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியவன். அவர்களது முல்லைத்தீவுக் கோட்டையை அழித்து அவர்களை வன்னியில் காலூன்ற விடாமல் தடுத்தவன். தன் தங்கை நளாயினிமீது ஒருதலைக்காதல் கொண்ட மற்றொரு சிற்றரசன் காக்கை வன்னியனை விரோதித்ததால், காக்கை வன்னியன்  பின்னாளில் ஆங்கிலேயருடன் இணைந்து  பண்டாரக வன்னியனுக்கு எதிராகச் சதிசெய்து அவனை நம்பவைத்துத் துரோகம் செய்து  ஆங்கிலேயரிடம் சிக்கவைத்து அவனைத் தோல்வியுற வைத்தான்.  வீர மன்னன் பண்டார வன்னியனின் வீரகாவியம் கற்பனைகலந்த காதல் காவியமாக இந்நூலில்  சுவையாக வடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

13189 வட கொழும்பு இந்து பரிபாலன சங்கம் பொன்விழா மலர் 2004.

மலர்க் குழு. கொழும்பு 15: வட கொழும்பு இந்து பரிபாலன சங்கம், 40A, கோவில் (டெம்பிள்) வீதி, 1வது பதிப்பு, 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). xxiv, 300 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,