திருமாவளவன் (மூலம்), டி.கலைச்செல்வன் (தொகுப்பாளர்). சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, 3வது பதிப்பு, நவம்பர் 2010, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 600002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை).
142 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 65.00, அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-81-8476-273-0.
ஈழத்தின் முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் இலங்கை அரசின் அழைப்பையேற்று 2009 ஒக்டோபர் 10ம் திகதி இலங்கைசென்ற இந்திய நாடாளுமன்றக்குழுவில் அங்கம் வகித்திருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தனது அனுபவங்களை இந்நூலில் 19 அத்தியாயங்களில் புகைப்பட ஆதாரங்களுடன் பகிர்ந்து கொள்கின்றார். இதில் முன்னர் சில சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம்செய்து விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களையும் சந்தித்துவந்ததையும் நினைவுகூர்கின்றார்.