சிங்காரவேலன். திருச்சிராப்பள்ளி 620002: உணர்ச்சிக் கவிஞர் பதிப்பகம், 2 காவிரி சாலை, தேவதானம், 1வது பதிப்பு, நவம்பர் 1999. (சென்னை 6000005: கவிக்குயில் பிரிண்டர்ஸ், 47 நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி).
112 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 17.5×12.5 சமீ.
கச்சதீவின் தோற்றம்- அமைப்பு, சோழர் ஆட்சியில் கச்சத்தீவு, சேது மன்னர் ஆட்சியில் கச்சத்தீவு, ஆங்கிலேயர் ஆட்சியில் கச்சத்தீவு, சுதந்திர இந்தியாவில் கச்சத்தீவு, கச்சத்தீவு தாரைவார்ப்பு, தில்லி ஆட்சியாளரின் பங்கு, தமிழ்நாடு அரசுகளின் பங்கு, கச்சத்தீவில் துயரங்கள், காசுக் கடலில் கச்சத்தீவு, போராட்டமே வெல்லும், இளைஞர்கட்கு அழைப்பு ஆகிய தலைப்புகளில் இந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய கச்சதீவு பற்றிய வரலாற்று ஆதாரங்கள் விளக்கமாகவும் சுவையாகவும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.