8999 விழுதுகள்: கட்டுரைத் தொகுப்பு.

குணா. பெங்களுர் 560 008: தமிழக ஆய்வரண், 3155/A, எச்.ஏ.எல் இரண்டாம் கட்டம், 1வது பதிப்பு, ஜனவரி 1997. (சென்னை 600005: மனோ அச்சகம்).

(6), 235 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 21.5×13.5 சமீ.

தமிழக எழுத்தாளரான குணாவின் முதலாவது கட்டுரைத் தொகுப்பு இது. வந்தேறிகளைத் தலைவர்களாகக்கொண்ட அந்நியரின் அரசியல் ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழகத்துத் தமிழர்களின் இழிநிலையையும் அண்டை நாடான ஈழத்தில்  நடக்கும் எல்லாளன் இனத் தலைமையின் மாட்சியும் இக்கட்டுரைகளில் ஒப்பீட்டளவில் பேசப்படுகின்றது. பிரபாகரனை நெஞ்சில் நிறுத்துவோம், ஈழ வழியா இந்தி(ய) வழியா? தமிழ்த் தேசியம்,  இனம் மீண்டும் எழுகிறது, தமிழகத்தில் வேற்றினத்தாரின் கொற்றம், தனித்தமிழும் திராவிடமும், இந்திரா பார்த்தசாரதியின் தவறான தமிழ் மதிப்பீடுகள், பெருஞ்சித்திரனாரின் பொதுமை உள்ளம், வாழட்டும் நம்மிடையே பாவலரேறு, உலைக்களம் ஒயலாகாது, சித்தர்வழிவந்த இடையன்குளத்தான், எரிமலையின் மேல் இந்துமதம், கோலார் தங்கச் சுரங்கங்களுக்கு வந்த கேடு என்ன? பெங்களுர் எங்களுர், இனப்படுகொலைக்குத் தண்டனை இல்லையா? தினமணிக்கு ஒரு மடல் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

9995 கியுபா புரட்சிகர யுத்தம்.

ஏர்னெஸ்ரோ ஷே குவேரா (மூலம்), மறுமலர்ச்சிக் கழகம் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1984. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). iv, 112 பக்கம், புகைப்படங்கள், விலை: