9004 சிறுவர் பொது அறிவு.

தரம் 4-7 வரையிலான மாணவருக்குரியது. வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், தேன் தமிழ் இல்லம், கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, மே 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி).

v, 167 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×14.5 சமீ., ISBN: 978-955-0635-34-4. புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான விசேட வழிகாட்டி நூல். இலங்கை, மற்றும் சர்வதேச பொதுஅறிவுத் தகவல்களை உள்ளடக்கியது. எமது நல்வாழ்வு,  எமது நாடு, எமது உலகம், விநோத உயிரினங்கள், விளையாட்டுக்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், உணவுப் பொருட்களைப் பாதுகாத்தல், நிறங்கள், மரங்கள், இசைக் கருவிகள், தாவரங்களும் பூக்களும், பறவைகள், அலகுகள், கால்கள், நிறுவனங்களும் இலச்சினைகளும், வீட்டுப்பாவனைப் பொருட்கள், தொழில்கள்-பயன்படுத்தும் உபகரணங்கள், தரத்தை உறுதிப்படுத்தும் குறியீடுகள், மானிகள்-கருவிகள். தகவல் தொடர்பு சாதனங்கள், பண்டிகைகள், வீதிப்போக்குவரத்துக் குறியீடுகள், இரேகைச் சித்திரங்கள், தையல் வகைகள், நட்சத்திரங்களின் வடிவங்கள் ஆகிய 23 தலைப்புகளில் பொது அறிவுத் தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. நூலாசிரியர், சமூக சேவைகள் அலுவலராக கோப்பாயிலுள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தில்  பணியாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 228518).      

ஏனைய பதிவுகள்

Rigtige Gysser Slots 2024 Rejsebog

Content Slot golden games – Online Russisk roulett Pr. Kasino 📌 Hvilken er ma bedste funktioner pr. fr spil? Er det lovligt at anbelange spilleautomater?