என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 520 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-659-419-5.
தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியலின் ஒன்பதாவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் மேலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு தூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாடவாரியாகப் பதியப்பட்டுள்ளது. பதிவுகள் 8001-9000 வரை தொடர் இலக்கமிடப்பட்டுள்ளன. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும். நூலின் பின்னிணைப்பாக ‘நூல்தேட்டம்: ஓர் மதிப்பீட்டு ஆய்வு’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி கல்பனா சந்திரசேகர், கோண்டாவில் பொது நூலகர் செல்வி அனிதா கந்தசாமி ஆகியோர் இணைந்து, 2013 தமிழ் ஆவண மகாநாட்டில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.