9015 நூல்தேட்டம் தொகுதி  9.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xviii, 520 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-659-419-5.

தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியலின் ஒன்பதாவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் மேலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு தூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாடவாரியாகப் பதியப்பட்டுள்ளது. பதிவுகள் 8001-9000 வரை தொடர் இலக்கமிடப்பட்டுள்ளன. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும். நூலின் பின்னிணைப்பாக ‘நூல்தேட்டம்: ஓர் மதிப்பீட்டு ஆய்வு’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி கல்பனா சந்திரசேகர்,  கோண்டாவில் பொது நூலகர் செல்வி அனிதா கந்தசாமி ஆகியோர் இணைந்து, 2013 தமிழ் ஆவண மகாநாட்டில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

16613 அக்கினி வளையம்: ஈழத்துக் கண்ணீர்க் கதைகள்.

பூங்கோதை. சென்னை 600 101: எஸ்.அருண்மொழித்தேவன், தேனருவி பதிப்பகம், 211/5, அண்ணா நகர் மேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1985. (சென்னை 600 024: விசாலம் பிரிண்டிங் ஹவுஸ், 2, 2ஆவது தெரு,  டாக்டர்

12564 – தமிழ்மொழி வழிகாட்டி.

தமிழ்மொழி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல். தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, மீள்பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 1955, 2வது பதிப்பு, 1967. (கொழும்பு 6: