ஆசிரியர் குழு. கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், ஏ.சீ.எச்.சீ.கட்டிடம், 91/5, சேர். சிற்றம்பலம் ஏ.கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×22 சமீ.
அகில இலங்கை இந்து மாமன்றம் யோகர் சுவாமிகளின் ஐம்பதாவது குருபூசை தினத்தையொட்டி 10.4.2014 இல் வெளியிட்ட இந்து ஒளி சிறப்பிதழ் இது. கந்தையா நீலகண்டன், ஆறு.திருமுருகன், முத்தையா கதிர்காமநாதன், ம.பாலகைலாசநாத சர்மா, த.மனோகரன், அ.கனகசூரியர் ஆகியோரை உள்ளடக்கிய ஆசிரியர் குழுவினால் தொகுக்கப்பெற்ற இம்மலரில் நூலகவியலாளர் என்.செல்வராஜாவின் ‘சிவயோகர் சுவாமிகளைப் பற்றி ஈழத்தில் எழுந்த சில நூல்கள்’ என்ற கட்டுரை உள்ளிட்ட ஈழத்துச் சித்தர்கள் பற்றியும் யோகர் சுவாமிகள் பற்றியதுமான ஏராளமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.