9022 கலசம் 75ஆவது சிறப்பிதழ்.

சதாசிவம் ஆனந்த தியாகர் (மலர் ஆசிரியர்). லண்டன்: சைவ முன்னேற்றச் சங்கம், 2, சலிஸ்பரி ரோட், மனர் பார்க், லண்டன் E12 6AB, 1வது பதிப்பு, சித்திரை-வைகாசி-ஆனி  2014. (லண்டன்: ஜே.ஆர்.பிரின்ட்).

68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×19 சமீ.

கலசம் இதழ் லண்டன் சைவ முன்னேற்ற சங்கத்தின் வெளியீடாக 1993 இல் இருந்து இன்றுவரை வெளிவருகிறது. காலாண்டு சஞ்சிகையான இந்த இதழின் ஆசிரியர்களாக மு.நற்குண தயாளன், ச.ஆனந்த தியாகர் திகழ்கிறார்கள். ஆன்மீக சஞ்சிகையான இந்த இதழ் சைவத்தை, இந்துக்களின் ஒழுக்க நெறிகளை உலகு அறிய செய்யும் நோக்கோடு வெளிவருகிறது. சைவம் சார்ந்த, கடவுள்களின் பெருமை, நாயன்மார்கள், திருத்தலங்கள், பக்தி பாடல்கள், தல வழிபாடுகள் என பல கட்டுரைகள், தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. இலண்டனிலிருந்து வெளிவரும் இந்த ஆன்மீகக் காலாண்டிதழின் சித்திரை-வைகாசி-ஆனி  2014 இதழ் 75வது சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பல்வேறு இந்து சமயக் கருத்துக்களையும் தத்துவங்களையும் விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். ஆன்மீகத்தை நோக்கி ஒரு பார்வை-நான் யார்?, ஒன்றும் நீயில்லை அன்றியொன்றில்லை,  தமிழும் சுவையும், நான் பார்த்த தேர்த்திருவிழா (முதற் பரிசுக் கட்டுரை), பக்தி இலக்கியங்களில் தமிழ், அழைப்பிற்கு முன்னர் நாம் செய்யவேண்டிய உழைப்பு, ஆவுடையார் கோயில்- பயணக்கட்டுரை, தமிழில் பக்தி இலக்கியம் வளர்ந்த வரலாறு, இறப்பும் பிறப்பும், வாழ்க்கை முறையும் சமய வழிபாடும், எனது வீட்டில் சமய வாழ்க்கை (முதற்பரிசுக் கட்டுரை), மனித நேயம், உபநிடதமும் சைவசித்தாந்தமும், சமய வாழ்க்கையும் எனது எதிர்காலமும் (முதற் பரிசுக்கட்டுரை), திருமுறைப் பெருமை, என்னை ஏன் இறைவன் படைத்தான் (முதற் பரிசுக் கட்டுரை), கண்ணனும் தாத்தாவும், அறத்தால் வருவதே இன்பம், மிருசுவில் கொட்டிகை அம்மன் கோவில், வினைப்பயன், சைவமுன்னேற்றச் சங்க அறப்பணி, மூத்தோர் நிலையமும் சிவபூமியும், நமது சமயமும் இன்றைய தலைமுறையும், Sakthi- the all pervasive kinetic Energy of Lord Siva, Hard Work-key to the gold mine, Kunkiliya kalaya Nayanar  ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

10114 இருள் நீக்கும் மணிச்சுடர்: சிந்தனையைத் தூண்டும் இந்து சமயக் கட்டுரைகள்.

சகிதேவி கந்தையா (மூலம்), க.சண்முகலிங்கம், வானதி காண்டீபன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,

16863 ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள் : கட்டுரைகள்.

சண். தவராஜா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சிவராம் ஞாபகார்த்த மன்றம்-சுவிஸ் கிளை, ஊடகவியலாளர் ஒன்றியம், 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை). ix, 274 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.