9027 ஜீவநதி ஏழாவது ஆண்டு மலர்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

136 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 29.5×21 சமீ.

‘ஜீவநதி’ யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ் ஆகும். 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2010 தை மாதத்திலிருந்து மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. மூத்த எழுத்தாளர்களினதும் இளைய தலைமுறையினரதும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கலை இலக்கிய நிகழ்வுகள், அரங்குசார் ஆய்வுக்குறிப்புகள், நூல்மதிப்புரைகள், நூல் அறிமுகங்கள் முதலிய பல உள்ளடக்கங்களைக் கொண்டு பிரசுரமாகின்றது. ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன், ‘கடல்’ எனும் கல்வியியல், உளவியல், சமூகவியலுக்கான சிற்றிதழினதும் பிரதம ஆசிரியராவார். இவர் மீண்டும் துளிர்ப்போம் (சிறுகதை), இலக்கியமும் எதிர்காலமும் (கட்டுரை), உளவியல் பிரிவுகள் ஒரு அறிமுகம் (உளவியல்) முதலிய நூல்களை எழுதியுள்ளதுடன் பல நூல்களைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். இவரது ஜீவநதி வெளியீட்டின் ஊடாக 100 இற்கும் அதிக நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. அல்வாய் கலையகத்தினால் வெளியிடப்படும் கலை இலக்கிய இருதிங்கள் ஏட்டின் ஏழாவது ஆண்டின் நிறைவாக வெளியான சிறப்பு மலர் இது. ஜீவநதியின் 70ஆவது இதழாக, வழமையான கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றுடன் இம்மலர் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

301 Rotiri Gratuite pe Superbet

Content Rotiri însă plată Magic Jackpot Revendică 100 Rotiri Gratuite Ci Plată B neglija să te înregistrezi pornind de deasupra site-ul me prep a beneficia