9030 ஆதி கிரேக்க மெய்யியல்.

யோன் பேணற்று (மூலம்), செ.வே.காசிநாதன் (தமிழாக்கம்). இலங்கை: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், கொழும்பு 7, 1வது பதிப்பு, 1965. (இலங்கை: இலங்கை அரசாங்க அச்சகம், கொழும்பு).

xi, 402 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

பிரித்தானியாவின் புனித அன்ட்ரூ பல்கலைக்கழகத்தின் கிரேக்க மொழிப் பேராசிரியரான John Burnet அவர்கள் எழுதிய Early Greek Philosophy என்ற நூலின் நான்காம் பதிப்பின் தமிழாக்கம் இதுவாகும். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில், மெய்யியல் பயிலும் மாணவர்களின் தேவைக்காகத் தயாரிக்கப்பட்டது. இதிகாசங்களிலிருந்து ஆரம்பித்து அணுவாதிகள் வரையிலான கிரேக்க மெய்யியல் பற்றிய வரலாற்றை இந்நூல்  விரிவாக எடுத்துக்கூறுகின்றது. தேலிசு முதல் லியுகிப்போசு வரை மெய்யியல்துறையில் ஈடுபட்ட பிரதான சிந்தனையாளர்கள் பலரைப் பற்றியும், இப்போன், இடையோசினிசு போன்றோர் பற்றியும் வரலாற்றுரீதியாக இந்நூல் ஆராய்வதுடன், இச்சிந்தனையாளர்களுடைய கொள்கைகளை அறிவதற்கு ஆதாரங்களாகப் பயன்பட்ட நூற்பகுதிகளும் நூலில் பொருத்தமான இடங்களில் தரப்பட்டுள்ளன. ஆதி கிரேக்க மெய்யியல் பற்றிய விரிவான தேடலுக்கு இந்நூல் வழிகாட்டுவதாயுமுள்ளது.                                                          

ஏனைய பதிவுகள்

17399 கருவுயிர்ப்பு.

நேசராசா சந்தோஷ். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200.,

Publication Of Ra Online Slot

Articles How Is it Slot Distinct from Guide Of Ra Classic? Real cash Casinos How will you Score 100 percent free Revolves In book From