தி.கணேஸ்வரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2002. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).
80 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 20., அளவு: 17.5×12.5 சமீ.
மனநல மருத்துவராகப் பணியாற்றும் வைத்திய கலாநிதி தி.கணேஸ்வரன் அவர்கள் எழுதிய நூல். மனமும் மூளையும், டேகாட்ரேயின் சிந்தனைகள், உலகாயதர் கொள்கை, மனம்-மூளைத் தொடர்பு, குணதுவைதக் கொள்கை, சர்வசமன் கொள்கைகள், தொழிலாயதம், வெளிப்படும் புதுக் குணக்கொள்கை, விளக்கும் துவைதம், உணர்வு நிலைகள், வேதாந்தக் கொள்கை, முடிவுரைஆகிய 12 இயல்களில் இந்நூல்வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 180564).