9038 கடவுளோடு பேசுதல்: சில ஆன்மீகக் குறிப்புகள்.

தாட்சாயணி (இயற்பெயர்: பிரேமினி சபாரத்தினம்). கொழும்பு 6: மீரா பதிப்பகம், 5/3 ஏ, மயூரா கோர்ட் -4, எட்வேர்ட் அவென்யூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).

viii, 72 பக்கம், விலை: ரூபா 200.,அளவு: 21.5×14 சமீ.

2004இல் ஞானம் இலக்கிய விருதுபெற்ற ஒரு மரணமும் சில மனிதர்களும் என்ற தனது முதலாவது சிறுகதைத் தொகுப்புடன் ஈழத்து  இலக்கிய நூல் வெளியீட்டுத்துறையில் அறிமுகமானவர் தாட்சாயணி. இளவேனில் மீண்டும் வரும், தூரப்போகும் நாரைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களை இதுவரை வெளியிட்ட இவரது ஆன்மீகம்சார்ந்த 16 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. உயிராஞ்சலி, மாற்றம், பாதை, வழித்துணை, தாகம், விடுதலை, புகழின் பிடிக்குள், அலைதலின் காலம், யாசகம், வழிகாட்டி, பூக்களின் வாசம்,  மாறாத இளமை, மாயத்தீவு, வருகையின் தடங்கள், கடைசி விருந்தாளி, மரணத்தின் வாசலில் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 211271).

ஏனைய பதிவுகள்

10829 கிழித்துப்போடு.

சித்தன் (இயற்பெயர்: எஸ்.ஜே.பிரசாத்). கொழும்பு 13: டிசைன் லாப், ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, நவம்பர் 2010. (கொழும்பு 13: டிசைன் லாப்). viii, 183 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை:

Pompeii Slot machine game

Articles Information about 100 percent free Gambling games Ideas on how to Victory Big Spartacus Position: Wager Intelligently How can i Get 100 percent free