ஆர்.டி.குணரத்தின (மூலம்), கு.உதயகுமார் , எம்.பி.எச்.முகம்மது (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 58, சேர் ஏர்னஸ்ட் த சில்வா மாவத்தை, 2வது பதிப்பு, 1976, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்;).
(3), 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
தேசிய உயர் கல்விச் சான்றிதழ்ப் பரீட்சைக்குரிய நூல். அளவையியல்: தன்மையும் நோக்கெல்லையும், அளவையியலின் கருத்துப் பொருள் இயல்பு, உண்மையும் வாய்ப்பும், அளவையியலும் தொகுத்தறிவும், அளவையியலும் மொழியும், அளவையியல், மொழி, வரைவிலக்கணம், அளவையியலின் நிறைவான இயல்பு, அளவையியலும் கணிதமும், அளவையியலும் உளவியலும், அளவையியலின் பயன்பாடு, நியமமில் போலிகள், விஞ்ஞான முறை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் இறுதியில் இரு பயிற்சிகளும் காணப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 225991).