9048 அளவையியலும் விஞ்ஞான முறையும்: முதற் பகுதி.

ஆர்.டி.குணரத்தின (மூலம்), கு.உதயகுமார் , எம்.பி.எச்.முகம்மது (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 58, சேர் ஏர்னஸ்ட் த சில்வா மாவத்தை, 2வது பதிப்பு, 1976, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்;).

(3), 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

தேசிய உயர் கல்விச் சான்றிதழ்ப் பரீட்சைக்குரிய நூல். அளவையியல்: தன்மையும் நோக்கெல்லையும், அளவையியலின் கருத்துப் பொருள் இயல்பு, உண்மையும் வாய்ப்பும், அளவையியலும் தொகுத்தறிவும், அளவையியலும் மொழியும், அளவையியல், மொழி, வரைவிலக்கணம், அளவையியலின் நிறைவான இயல்பு, அளவையியலும் கணிதமும், அளவையியலும் உளவியலும், அளவையியலின் பயன்பாடு, நியமமில் போலிகள், விஞ்ஞான முறை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் இறுதியில் இரு பயிற்சிகளும் காணப்படுகின்றன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 225991).

ஏனைய பதிவுகள்

15968 ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்கள்.

 சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. சமூக விஞ்ஞான

12153 – திருவெம்பாவை-திருவம்மானை: மூலமும் உரையும்.

தமிழவேள் க.இ.கந்தசாமி (உரையாசிரியர்). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). 50 பக்கம்,