எஸ்.கே.கேசவதாசன். தெகிவளை: க.கேசவன், 219/8, காலி வீதி, இணைவெளியீடு, கார்த்திகேயன் வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கொழும்பு: கார்த்திகேயன் பிரைவேற் லிமிட்டெட்).
iii, 63 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13 சமீ.
இந்நூல் க.பொ.த.உயர்தர வகுப்பிற்குரிய அளவையியலும் விஞ்ஞான முறையும் என்னும் முதலாம் பகுதியில் பகுதி ஒன்றில் வரும் பெறுகைமுறை, துணைப் பெறுகைமுறை என்னும் பாடத்திட்டத்தை அனுசரித்து செய்கை முறைப் பயிற்சி, தரமாக வகுக்கப்பட்ட பயிற்சி வினாக்களை உள்ளடக்கியதாக ஆக்கப்பட்டுள்ளது. அளவையியல் தொடர்பாகப் பல நூல்களை எழுதியுள்ள இந் நூலாசிரியர், கொழும்பு- வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119017).