சபா சிவாநந்தன் (தொகுப்பாசிரியர்). ஒன்ராரியோ: ஆத்மஜோதி நிலையம், இந்து சமயப் பேரவை, 80, Barbados Blvd, Unit 4, Scarborough, Ontario, M1K 1K9, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (கனடா: விவேகா அச்சகம், ரொரன்டோ).
x, 55 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 75., அளவு: 21.5×14 சமீ.
தவசீலர் சதானந்த சுவாமிகள் 6.5.1896இல் புங்குடுதீவில் பிறந்தவர். அகவை 87இல் 30.1.1983இல் அமரத்துவம் அடைந்தவர். இவர் சுவாமி சிவானந்தரைக் குருவாகக் கொண்டவர். அவரிடம் ஞானோபதேசம் பெற்றுத் துறவுபூண்டவர். சப்த தீவுகளின் தெய்வநெறிக்கழகத்தை வழிநடத்தியவர். சுவாமிகள் தானே எழுதிவைத்திருந்த அருள்மொழிகளைத் தேடிப் பெற்று புங்குடுதீவு மத்தி திரு. சபா சிவாநந்தன் (கு.ச.நந்தனார், தாட்சாயணி) இத்தொகுப்பை தொகுத்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 133641).