9067 பசுவின் கதை.

ஸ்ரீ லங்கா புத்தகசாலை. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்-புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி).

20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

கர்நாடக மாநிலத்தில் வழக்கிலிருந்த ‘தரணி மண்டல மத்ய தொலகே…’ என்று தொடங்கும் ஒரு கன்னட மொழி நாட்டார்  பாடல் புண்யகோடி என்ற பசுவின் கதையாகும். இந்திய நீதிக்கதையாக வழிவழியாகப் போதிக்கப்பட்ட இக்கதையின்படி காளிங்கன் என்ற  இடையன் பராமரித்த பசுக்களில் ஒன்றான புண்யகோடி ஒரு நாள் பசித்திருந்த புலியிடம் அகப்படுகின்றது. பசுவோ புலியிடம் இரந்து தன் கன்றுகள் பசியால் வாடுவதாகவும், இருப்பிடம் சென்று அவற்றிற்குப் பால் வழங்கிவிட்டு புலியின் பசிபோக்க மீள வருவதாகக் கூறுகின்றது. புலியோ பசு திரும்பி வருவதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்கிறது.  பசுவும் தான் செய்த சத்தியம் தவறித் திரும்பி வராவிட்டால்  70 வகையான பாவங்களைப் பட்டியலிட்டு அப்பாவங்களைச் செய்தவர்கள் செல்லும் நரகத்திற்கே தான் போய்ச்சேர்வேனென்று கூறுகின்றது. புலியும் புண்யகோடி என்ற அப்பசுவை நம்பி  வீடுதிரும்ப விட்டுவிடுகின்றது. பசுவும் தன் கன்றுகளிடம்  மீண்டு அவற்றிற்குப் பால் வழங்கிவிட்டு, தன்நிலையை எடுத்துக்கூறி, தான் புலிக்குப் பலியாகச் செல்ல முடிவெடுத்துள்ளதைத் தெரிவிக்கிறது. கன்றுகளும் காளிங்கனின் மற்றைய பசுக்களும் புண்ணியகோடியை புலியிடம் திரும்பவிடாது தடுக்க முயல்கின்றன. சத்தியம் தவறாத பசு அவர்களுக்கு உரிய ஆறுதல் சொல்லிப் புலியிடம்  இரையாகச் செல்கின்றது. பசுவை மீண்டும் கண்ட புலியோ மனம்மாறி, சத்தியம் தவறாத உன்னைப் புசித்துத் தான் பாவம் தேடி நரகத்திற்குச் செல்வதைவிட பட்டினியால் தன்னுயிரையே மாய்த்துக்கொள்வது மேல் என்று மலையுச்சியிலிருந்து வீழ்ந்து மடிகின்றது.  இக்கதையே தமிழ் வடிவில் சிறு மாற்றங்களுடன் இந்நூலில் பசுவின் கதையாக இடம்பெறுகின்றது.

ஏனைய பதிவுகள்

सट्टेबाजीका लागि हजारौं विकल्पहरूको बुकमेकर 1xbet KZ

केवल एक लाइन। कमिला। तेर्सो रेखा पुष्टि हुनेछ, गेमरले लेखा डायरीको वेब पृष्ठमा नगद दर्तामा जान सक्छ। यसले बैंक स्थानान्तरण, भुक्तानी प्रणाली, र क्रिप्टोकरेन्सीहरू सहित