9069 திருக்குறள் ஆய்வுரை: பாகம் 1.

ஆ.வடிவேலு. பருத்தித்துறை: ஆ.வடிவேலு, ஓய்வுநிலை அதிபர், 1வது பதிப்பு, ஆனி 2013. (பருத்தித்துறை: தீபன் பதிப்பகம், பிரதான வீதி).

xxviii, 113 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44548-0-4.

திருக்குறள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய நூல். அறநூல்களைப் படிப்பதிலிருந்து பின்வாங்கிவரும் ஒரு இளைய தலைமுறையினரை மீளவும் அந்நூல்களின்பால் அக்கறைகொள்ளச்செய்யும் நோக்கம் இந்நூலின் உருவாக்கத்தின் பின்புலமாயமைந்துள்ளது. இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ள குறட்பாக்களும் பெரும்பாலும் எமது அன்றாட வாழ்வோடு தொடர்புபட்டவையாக அமைந்துள்ளன. கற்றதனால்ஆய பயன் என்கொல் (2), வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு (4), அறத்து ஆறு இதுஎன வேண்டா சிவிகை (37), வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் (50), தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது (55), அகன் அமர்ந்து ஈதலின் நன்றே (92), உலகத்தோடு ஒட்ட ஒழுகல் (140), அறன்வரையான் அல்ல செயினும் (150), அழுக்கற்று அகன்றாரும் இல்லை (170), அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் (181), பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற (297), மயிர்நீப்பின் வாழாக் கவரிமா (969) ஆகிய ஒவ்வொரு திருக்குறளை முன்வைத்து  எழுதப்பட்ட கட்டுரைகள் பன்னிரண்டின் தொகுப்பு இது. அடைப்புக்குறிக்குள் குறள் எண் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57822).

ஏனைய பதிவுகள்

Nederlands Goksites Wettig

Volume Verhoo Uwe Mogelijkheid Om Gedurende Winnen Om Gij Bank!: meerdere 76 betaallijnen gokkast gratis games Nadelen Gokhuis Zonder Cruks: Populaire Goksites Wettig Casino Nederland