9085 இந்து நாகரிகம்: பாகம் 1: வேதங்கள், குப்தர் காலம், பல்லவர் காலம்.

சிவபாதம் கஜேந்திரகுமார். வவனியா: சிவ.கஜன், கற்பகம் கலைக்கூடம், 172, கண்டிவீதி, 2வது பதிப்பு, ஏப்ரல் 2010, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (வவுனியா: எவரெடி பதிப்பகம், இல.24, 2ம் குறுக்குத் தெரு).

xiv, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூல் வேதங்கள், குப்தர் காலம், பல்லவர் காலம் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் எழுதப்பட்டுள்ளது. வேதங்கள் என்ற முதற் பிரிவில் இருக்கு வேதம், யசூர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம், வேதகால வினாக்களும் விடைகளும் ஆகிய உபதலைப்புகளும், குப்தர் காலம் என்ற இரண்டாவது பிரிவில் இலக்கியங்கள், சைவ-வைணவ-கௌமார சமயங்களின் வளர்ச்சி, அரசியல் நிலை, கோயில்கள், தத்துவ சிந்தனை, கட்டிட சிற்பக் கலை வளர்ச்சி ஆகிய உப தலைப்புகளும், பல்லவர் காலம் என்ற மூன்றாவது பிரிவில், தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் தோன்றி வளர்ந்த வகை, அரசர்கள் பின்பற்றிய கொள்கைகள், ஆலய வழிபாடு, பக்திநெறி, சமுதாய மாற்றம், சைவ சமய வளர்ச்சிப் போக்கு, வைஷ்ணவ சமய வளர்ச்சிப் போக்கு ஆகிய தலைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13120 இந்து சமய பாடம்.

க.சொக்கலிங்கம் (புனைபெயர்: சொக்கன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி). (8), 221 பக்கம், விலை: ரூபா 8.50, அளவு: