9088 இந்து நாகரிகம்: முதலாம் பாகம்.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய பொத்தகக் களஞ்சியம், 235 காங்கேசன்துறைச் சாலை, 1வது பதிப்பு, ஜூன் 1995. (யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ.தம்பி வீதி).

(5), 112 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.

காணபத்தியம், சைவம், சாக்தம், வைணவம், கௌமாரம், சௌரம், வேதாந்தம், சைவசித்தாந்தம் ஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்து நாகரிகப் பாடப்பரப்பில் சிறப்பாக இந்து சமயநெறிகள் பெறும் முக்கியத்துவத்தினை உணர்ந்து அவை பற்றி இந்நூலில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்து தத்துவ மரபில் சிறப்புப் பெறும் இருபெரும் தத்துவங்களாகிய வேதாந்தம் பற்றியும் சைவசித்தாந்தம் பற்றியும் பல அடிப்படை விடயங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பரந்துபட்ட விடயங்களைக்கொண்ட இத்துறைகள் பற்றிய ஒரு பரிமாணத்தை மாணவர்கள் அறிந்துகொள்வதற்குச் சொக்கனின் இந்நூல் துணைபுரியவல்லது. வித்துவான் க.சொக்கலிங்கம், சொக்கன் என இலக்கிய உலகில் நன்கு அறியப்பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

10371 விவசாய விஞ்ஞானம்: பகுதி 1.

கே.நரேந்திரன். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு 13: லட்சுமி பிரின்டர்ஸ், 195, Wolfendhal Street). x, 134 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

15639 துரோகி (நாடகம்).

எம்.ஏ.அப்பாஸ். கொழும்பு: ஸீனத் வெளியீடு, 118, பழைய சோனகத் தெரு, 1வது பதிப்பு, ஜுன் 1951. (கொழும்பு 12: கிரௌண் பிரின்டிங் வேர்க்ஸ், 105, புனித செபஸ்தியார் தெரு). (8), 154 பக்கம், விலை: