9097 சிவஞானபோதம்.

மெய்கண்டதேவ நாயனார் (மூலம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ காந்தா அச்சகம், புத்தகசாலை, 1வது பதிப்பு, மே 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).

35 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:விலை:  18.5×11.5 சமீ. சைவர்கள் ஓதி, உணர்வதற்கு அத்தியாவசிமாய் இருக்கும் நூல்கள், திருமுறைகளும் சைவ சாஸ்திரங்களுமாகும். சைவ சாஸ்திரங்கள் பதினான்கினுள் முதல் நூலாகச் சொல்லப்படுவது மெய்கண்ட தேவநாயனார் அருளிய சிவஞானபோதமாகும். யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரின் அழைப்பை ஏற்று பாரத நாட்டிலிருந்து ஈழநாட்டிற்கு வருகை தந்த காஞ்சிபுரம் சைவசித்தாந்தக் கலைச்செல்வர் க.வச்சிரவேலு முதலியார் அவர்கள் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, யாழ்ப்பாணம் சைவ வளர்ச்சிச் சங்கம் ஆகிய இரு சபைகளினதும் ஆதரவில் 10.5.1967 தொடக்கம், 7.6.1967 வரையுள்ள நாட்களில்  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் சைவ சித்தாந்த வகுப்பு நடத்தியிருந்தார்கள். சிவஞான போதம் அவர்களின் பாடநூலாக அமைந்துள்ளது.(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 225470). 

ஏனைய பதிவுகள்