9118 இலங்கைத் திருச்சபைக் காவலராம் யோசேவ் வாஸ் முனிவர் அம்மானை.

ம.விக்டர் (புனைபெயர்: அமுதகவி யாழ் ஜெயம்). யாழ்ப்பாணம்: யாழ். கத்தோலிக்க இலக்கியக் கழகம், 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).

30 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 21.5×14 சமீ.

அமுதகவி யாழ் ஜெயம் என அழைக்கப்படும் இளைப்பாறிய ஆசிரியர் ம.விக்டர் அவர்களால் பாடப்பெற்ற அம்மானை. புனித யோசப் வாஸ் (Saint Joseph Vaz) இந்தியாவின் கோவாவில் பிறந்து, இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த கத்தோலிக்க குருவானவர் ஆவார். இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இவர் கண்டி இராச்சியத்தில் தங்கியிருந்து இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையை மீளமைத்தார். கத்தோலிக்கர்களுக்கு இவர் ஆற்றிய பணிகளுக்காக இவர் இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்பட்டார். 1995 சனவரி 21ம் நாள் கொழும்பு நகரில் இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அருளாளர் பட்டம் வழங்கினார். 2015 சனவரி 14 அன்று கொழும்பு நகரில், காலிமுகத் திடலில் வைத்து, திருத்தந்தை பிரான்சிசு புனிதராகத் திருநிலைப்படுத்தினார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 103040).

ஏனைய பதிவுகள்

Free Spins Inte me Insättningskrav För Sverige

Content Insättningskrav Betalningsmetoder Villig Utländska Casino Inte med Svensk person Tillstånd Kan Mi Vinna Riktiga Deg Gällande Casino Minsta Insättning 20 Frisk? Casino Utan Omsättningskrav